சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்ற கழுகமுவ மத்திய கல்லூரி மாணவிகளுக்கு கௌரவம்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
மத்திய மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் முதன் முறையாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சூழல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றாடல் முன்னோடி
இணைப்பாட விதான செயற் திட்டத்தில் ஜனாதிபதி பதக்கத்தை முதல் முறையாக வென்று கெலிஓய ,கழுகமுவ மத்திய கல்லூரி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட கெலிஓய, கழுகமுவ பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையான கழுகமுவ மத்திய கல்லூரி மாணவிகளான ஏ.எம்.மரியம் லீனா ,எம்.என் .நூருல் ஹிக்மா, எம்.ஏ.எப். பர்ஹா, பீ.எப்.சஹாமா, எம்.எஸ்.சல்மா, எம்.எஸ்.எப்.சஹானா ஆகியோரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஆர்.எம்.அனஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கம்பளை தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் பஸ்லான் பாறூக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பஸ்லான் பாறூக் பௌண்டேசன் ஊடாக பரிசில்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்