கண்டல் தாவரங்களை நடுவது தொடர்பான ஆய்வு செய்தல் திருகோணமலை மாவட்டத்தில்!
மூதூர் நிருபர்)
திருகோணமலை மாவட்டத்தின் கரையோரமாகவுள்ள தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகப்பிரிவுகளில் கண்டல் தாவரங்கள் நடுவது தொடர்பான ஆய்வுக்குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
மூதூர் , வெருகல் ,கிண்ணியா ,திருகோணமலை குச்சவெளி மற்றும் தம்பலகாமம் ஆகிய பிரதேச செயலகப்பகுதிகளுக்கு கள விஜயம்செய்து கண்டல் தாவரங்களை நடுவது பற்றிய கள ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
குறித்த ஆய்வுக்குழுவினர் மூதூர் பிரதேச செயலகப் பகுதிகளில் கடந்த சனிக்கிழமை விஜயம்செய்து இதுதொடர்பான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு இதுதொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உரிய இடங்களை இக்குழுவினருக்குக் காண்பித்துள்ளனர் என மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் கூறினார்.