‘வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்’ கொழும்பில் நூல்வெளியீட்டு விழா

(அஸ்ஹர் இப்றாஹிம்)

எழுத்தாளர் முஹம்மட் சாலிஹீன் எழுதிய ‘ வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்’ என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை வளிமண்டலவியல் கேட்போர் கூடத்தில் நூலாசிரியரின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் ,உயர் நீதிமன்ற நீதிபதியரசர் ஏ.எச்.எம்.திலீப் நவாஸ் ,இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஸிம் உமர் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக புவியியல் துறை தலைவி பேராசிரியை பரீனா றுசைக், அமானா வங்கி பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் முஹம்மட் அஸ்மிர், சுங்க திணைக்கள மேலதிக பணிப்பாளர் சம்சுதீன் நியாஸ் ஆகியோரும், விஷேட அதிதிகளாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் யூ.எல்.யாக்கூப், சிரேஸ்ட அறிவிப்பாளர் பஷீர் அப்துல் கையூம், மௌலவி எம்.ஆர்.அப்துல் றஹ்மான், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜௌபர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது நூலின் முதல் பிரதியை இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக்கொண்டார்.

oznorMB