பன்னூலாசிரியர் மதினா உம்மாவின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா!
எம். எப். றிபாஸ்
அக்கரைப்பற்று பன்னூலாசிரியர் எம். ஐ. மதினா உம்மாவின் 16 ஆம், 17 ஆம் நூல்களான கவிதை தொகுப்புகள் அடங்கிய ‘வாழ்வை நிகர்த்த வானவில்’மற்றும் ‘கலை’ ஆகிய இரு நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சேவையர் ஏ.முகைதீன் பாவா தலைமையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு ஆய்வாளர் சிராஜ் மக்ஷுர் பிரதம அதிதியாகவும், பிரதேச செயலாளர்களான அல்ஹாபீல் எம். எஸ். எம். றஸ்ஸான் மற்றும் ஏ.சி. ஏ அப்கர் ஆகியோர் கௌரவ அதிதிகளாவும், பிறை எப்.எம் கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் ஹையூம், எழுத்தாளர் அக்கரையூர் அப்துல் குத்தூஸ் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் நூல் நயவுரையை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் பிரதி கல்வி பணிப்பாளர் அ. ஸ. அஹமட் கியாஸ் நிகழ்த்தினார். இதேவேளை நூலின் முதல் பிரதிநிதியை நூல் ஆசிரியரால் யூ. எல். அஹமட் மஸாஹிருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் நூல் ஆசிரியருக்கு அக்கரையூர் அப்துல் குத்தூஸ் தம்பதியினரால் பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.