அம்பாறையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஆற்றில் பாய்ந்தது!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
அம்பாறையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் பாதையை விட்டு விலகி ஆற்றில் விழுந்ததில் பல மாணவர்கள் காயப்பட்டுள்ளனர். உயிர்ச்சேதம் எதுவும் இடம்பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அம்பாறை ரணவிரு மாவத்தைக்கு அருகில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்த மாணவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் சேர்க்ப்பட்டுள்ளனர் எனவும் அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்