கிராம சக்தி வேலை திட்டத்தின்கீழ் 15 லட்சம் ரூபா நிதி கடன் உதவி!
(சர்ஜுன் லாபீர்)
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனிபாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக கிராம சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை புளோக் ஜே வெஸ்ட்-2கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 32 பயனாளிகளுக்கு சுழற்சி முறையிலான நுண்கடன் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ. ஜெஸிலா தலைமையில் புலோக் ஜே.வெஸ்ட் -02 பல்தேவைக் கட்டடத்தில் இடம்பெற்றது.
இக் கிராமத்தில் வாழ்வாதார தொழில் மேம்பாட்டுக்காகத் தெரிவு செய்யப்பட்ட 32 பயனாளிகளுக்கும் 1.5.மில்லியன் நிதியுதவி கடனாக வழங்கப்படவுள்ளது. என்பதுடன் இதுவரை 3 கட்டங்கள் சிறப்புற இடம்பெற்றதுடன் இது 4 ஆம் கட்ட நிதி வழங்கல் செயற்திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த நுண்கடன் வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவித் தொகைகளை வழங்கி வைத்;தார்.
மேலும் இந்நிகழ்வில் விடயத்துக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம் பௌஸான், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் நியாஸ்,கிராம சக்தி சங்க நிர்வாகிகள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.