கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வாய் சுகாதாரப் பிரிவிற்கு மருந்துப் பொருள்கள்!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
உலக வாய்ச் சுகாதார தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாய் சுகாதார பிரிவிற்கு யுனிலிவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகை மருந்துப் பொருள்கள் கையளிக்கப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஸ்ரீலங்கா யுனிலிவர் நிறுவன அதிகாரிகள்,பணிமனை வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோஸ்தர்கள் பங்கேற்றனர்.