அம்பாறை மாவட்ட செயலக கணக்காளராக ஐ.எம் பாரீஸ்
(சர்ஜுன் லாபீர்)
அம்பாறை மாவட்ட செயலாளரின் உள்ளக இடம்மாற்றத்திற்கிணங்க நிந்தவூரைப் பிறப்பிடமாகவும், சம்மாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட இலங்கை கணக்காளர் சேவை தரம் 01ஐ சேர்ந்த எஸ்.எல் ஐ.எம் பாரீஸ் புதன்கிழமை அம்பாறை கச்சேரியில் புதிய கணக்காளராக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, அம்பாறை பிரதம கணக்காளர் ஏ.எம் ஆதம்பாவா,சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா,சம்மாந்துறை பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே.ரினோஸா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இவர் கல்முனை,அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை,சம்மாந்துறை பிரதேச செயலகம் போன்ற இடங்களில் கணக்காளராகவும் கடமையாற்றியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது