போதை ஒழிப்பு நடைபவணி கிண்ணியாவில் சனி நடந்தது!
‘ஒரே கிராமம் ஒரே நாடு’ என்ற தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்ற செயல் திட்டத்திற்கு அமைவாக சனிக்கிழமை கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போதை ஒழிப்பு நடைபவனி கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனியின் பங்களிப்புடன் இடம்பெற்றது. போதை ஒழிப்பு தொடர்பான பதாகைகளுடன் கிண்ணியா பிரதான வீதி ஊடாக ஊர்வலமாக நோவா விளையாட்டுக் கழகத்தினர் இணைந்து இதனை ஏற்பாடு செய்தனர்.
நோவா விளையாட்டு கழகத்தின் 35 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது வைத்தியர் எம்.ஏ சமீம், நோவா விளையாட்டு கழகம் மற்றும் ஏனைய விளையாட்டு கழக வீரர்களும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.