அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் கிறிக்கெட் சுற்றுபோட்டி!
(எம். எப். றிபாஸ்)
‘அறபா பிரீமியர் லீக் 2024’ கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு அட்டாளச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், சுங்கத்திணைக்களத்தின் ஓய்வு பெற்ற மேலதிக பணிப்பாளர் நாயகம் நியாஸ் முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள், பழைய மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள்,
நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் விஷேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்