அறபா வித்தியாலய பழைய மாணவர்கள் பங்கேற்ற கிரிக்கெட்டில் 2013 ஆம் ஆண்டு அணி சம்பியனானது!
அபு அலா –
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 09 பேர் கொண்ட 05 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் உபசெயலாளர் ஏ.அர்ஷாட் தலைமையில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் 03 ஆம் திகதி வரை இடம்பெற்ற இப்போட்டியில், 21 பழைய மாணவ அணிகள் பங்கேற்றுக் கொண்ட இச்சுற்றுப்போட்டியின் இறுதித் தெரிவுக்கு 2007 ஆம் ஆண்டு அணியும், 2013 ஆம் ஆண்டு அணியும் தெரிவாகின.
இதில் 2013 ஆம் ஆண்டு அணியினர் சம்பியனாகவும், 2007 ஆம் ஆண்டு அணியினர் இரண்டாவது இடதையும் பெற்றுக்கொண்டது. சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட அணிக்கு ரூபா 75,000 பணப் பரிசும், சம்பியன் கிண்ணமும், இரண்டாவது இடத்தினைப் பெற்றுக்கொண்ட அணிக்கு ரூபா 50,000 பணப் பரிசும் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதிநாள் போட்டிக்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதியாகவும், கௌரவ அதிதிகளாக சுங்கத் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ்.நியாஸ், ஏ.சி.நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.சி.நியாஸ் மற்றும் பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அன்சார் ஆகியோர் கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தனர்