லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பெண்களுக்கான இணையவழி பாதுகாப்பு செயலமர்வு

 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, லைகா ஞானம் அறக்கட்டளை மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியுடன் இணைந்து  இளம் பெண்களின் நல்வாழ்வு மேல் கொண்ட அக்கறை நிமிர்த்தமாக டிஜிற்றல் முறைமை மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான அறிவை மேம்படுத்தும் நோக்கில் 2024 மார்ச் 7 ஆம் திகதி பாடசாலை கேட்போர் கூடத்தில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் 10 முதல் 13 ஆம் வகுப்பு வரை கல்விகற்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர். அடுத்தபெண் தலைமுறையினருக்கு இணையப் பாதுகாப்பு தொடர்பான தெளிவான அறிவூட்டலை வழங்குவதனூடாக பெண்களின் சுய பாதுகாப்பிற்கான ஸ்திரத்தன்மையை மேன்படுத்தக்கூடியதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

இந்த நிகழ்வு, ‘பெண்களுக்கான டிஜிற்றல் பாதுகாப்பு மற்றும் டிஜிற்றல் நல்வாழ்வு’ என்பதை கருப்பொருளாக கொண்டமைந்திருந்து. நிகழ்நிலையை (ஒன்லைனை) இயக்க தேவையான தெளிவான அறிவு மற்றும் நிகழ்நிலை தொடர்பான திறன்களை இளம் பெண்களிடையே மேம்படுத்துதலை மையமாகக் கொண்டு இந்த நிகழ்வு அமைந்திருந்தது.  அத்துடன் இது ஓர் இணையப் பாதுகாப்பு பற்றிய புரிதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி என்பதைத் தாண்டி டிஜிற்றல் பின்னடைவு கலாசாரத்திலிருந்து பெண்களை வளப்படுத்துவதையும் நோக்கம் ஆகக் கொண்டமைந்திருந்தது.

இந்த நிகழ்வின் பங்கேற்பாளர்களான இளம் பெண்கள், ஒன்லைனில் எதிர்கொள்ளக்கூடிய குறிப்பிட்ட சவால்களை வெற்றிக்கரமாக  எதிர்கொள்ளும் வகையில் கலந்துரையாடல் மற்றும்  செயற்பாட்டு அமர்வுகளும் இடம்பெற்றன. சிறந்த முறையில்  வடிவமைக்கப்பட்டு மாணவர்களுக்கு இலகுவான முறையில் தெளிவூட்டல்களை அளித்தமைக்கு மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி நிர்வாகத்தினர் நன்றிகளைத்  தெரிவித்ததுடன் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இந்த முயற்சிகளுக்கு முழு மனதுடன் ஆதரவினையும் வழங்கியிருந்தனர்.

மேலும் குறித்த தினத்தில் மன்னார் அடம்பன் கிராமத்திலும் சமூக மட்ட பெண் தலைவர்களுக்கான இணையவழிப் பாதுகாப்பு தொடர்பிலான செயலமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கத்து.