சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் லியோ கழகம் அங்குரார்ப்பணம்!
சுன்னாகம் லயன்ஸ் கழகத்துக்கு ஆளுநரின் உத்தியோக வருகை அண்மையில் கந்தரோடையில் சுன்னாகம்; லயன்ஸ் கழகத் தலைவர் லயன் செ.விஜயராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்டம் 306 பி1 இன் ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் – லயன் சாவித்திரி பீற்றர் தம்பதிகள் பிரதம விருந்தினர்களாகவும் லயன் தேவா டி பீற்றர் – லயன் ஜெசிந்தா தம்பதிகள் சிறப்புவிருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
மேற்படி நிகழ்வில் சுன்னாகம் லியோ கழகத்துக்கான புதிய நிர்வாகம் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்ட லயன் தேவா டி பீற்றரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
சுன்னாகம் லியோ கழகத்துக்கு புதிய தலைவராக லியோ மரியதாஸ் சனோஜனும் செயலாளராக லியோ டினேஸ் மதுமிதாவும் லியோ சபீசன் பொருளாளராகவும் மற்றும் ஏழு பேர் கொண்ட நிர்வாகிகள் குழுவும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.