ஈழத்து பெண்களும் இனியொரு பலமும் தமிழரசின் பேரெழுச்சி கிளிநொச்சியில்!

 

ஈழத்துப் பெண்களும் இனியொரு பலமும் எனும் தொனிப்பொருளில்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மாதர் அணியினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி புனித திரேசாள் நிலைய மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ள 2024 பன்னாட்டு மகளிர் நாள் நிகழ்வு கலை நாச்சி மாவட்ட மாதர் முன்னணி தலைவர் திருமதி முறாளினி தினேஷின் தலைமையில் இடம்பெற்றது

இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற சட்டவளவாளர் திருமதி விஜயராணி சதீஷ்குமார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் , சமூக செயற்பாட்டாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி , தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியின் யாழ்.மாவட்ட செயலாளர் கருணாகரன் குணாளன் , தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணியின் பிரமுகர்களான சசிகலா ரவிராஜ் , சி.விமலேஸ்வரி, மிதிலைச்செல்வி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் நடனம் கவிதை விருது வழங்கல் என பல நிகழ்வுகள் நடைபெற்றன.