பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி பரிசில்கள் வழங்கல்!

 

ஹஸ்பர் ஏ.எச்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டிக்கான சான்றிதழ்களும் மற்றும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

தேசிய கீதம் இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றி தொடர்ந்து மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.விஜயதாசனால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

இதன்போது பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரல கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வரவேற்பு நடனம், தனி நடனம், குழு நடனம் மற்றும் பாடல்கள் போன்ற கலை கலாசார நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தன. இதன் போது சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிரதி பிரதம பணிப்பாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.