வவுனியா வடக்கில் சிறப்பாக இடம்பெற்ற வடக்கு மாகாண புத்தாண்டு விழா

 

வடக்கு மாகாண புத்தாண்டு விழா வவுனியா வடக்கு நெடுங்கணி மகாவித்தியாலய மைதானத்தில் இன்று (16.04) சிறப்பாக இடம்பெற்றது.

 

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை, வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம், தொழில்துறை திணைக்களம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலகமும் வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகமும் இணைந்து நடத்திய குறித்த நிகழ்வானது வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றதுடன் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

 

இதன்போது பாரம்பரிய முறையில் விருந்தினர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு, தமிழ் சிங்கள கலை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுக்கள், மறைந்து செல்லும் தமிழர் பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள், பாரம்பரிய உணவு கண்காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

 

இந் நிகழ்வில் வவுனியா மாவட்டச் செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன், அரச அதிகாரிகள், வவுனியா வடக்கு கல்வி வலய அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.