காத்தான்குடியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை கடற்கரையோரம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிற்குள் உள்ளடங்கும் குறித்த பிரதேசத்தில் இன்று (18) மதியம் 12 மணியளவில் கரை ஒதுங்கிய குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவைத்துள்ளனர்.
55 வயது மதிக்கத்தக்க குறித்த பெண் எவ்வாறு மரணித்தார் என்பது குறித்த விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் குறித்த பெண்ணின் சடலம் தற்போது காத்தான்குடி பாலமுனை கடற்கரை ஓரம் வைக்கப்பட்டுள்ளது.