மட்டக்களப்பில் கைத்தொலைபேசியால் கத்திக்குத்து கொலை
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு நடைபெற்ற குறித்த சம்பவம் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.