யாழில் வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி
யாழ் – ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி இன்று நடைபெற்றது.
ஊர்காவற்றுறை வைத்தியசாலை நோயாளர் விடுதி ஒன்றை கட்டுவதற்கான நன்கொடைகளை கொடையாளிகளிடமிருந்து பெற்றுவதற்கான விழிப்புணர்வின் நிமித்தமும் மக்களுக்கான சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நடைபவனி இடம்பெற்றது.
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ். போதனா வைத்தியசாலையும் இணைந்து நடைபவனியை ஏற்பாடு செய்ததுடன் வடமாகாண பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனை ஆகியன பங்கேற்றது.
குறித்த நடைபவனி யாழ். போதனா வைத்தியசாலையில் காலை 6 மணியளவில் ஆரம்பித்து பண்ணை வீதி வழியாக ஊர்காவற்றுறை வைத்தியசாலையை அடைந்தது.