தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விஜயதாச ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்க நடவடிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயர் மற்றும் நிறைவேற்று குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழுக் கூட்டம் நேற்று எத்துல்கோட்டே பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது. குறித்த செயற்குழு கூட்டத்தின் போது, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.