இன்றைய நாள் எப்படி – 24 ஏப்ரல் 2024
24/04/2024 புதன்கிழமை
1)மேஷம்:-
உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் இலாகா மாற்றம். ஊதிய உயர்வு போன்றவை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
2)ரிஷபம் :-
மனை கட்டி குடியிருப்பது பற்றி சிந்திப்பீர்கள். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் உண்டு. யோகம் உண்டு.
3)மிதுனம்:-
பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்களை வாங்கலாமா என்று சிந்திப்பீர்கள். பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நினைவாக்கும் முயற்சி கைகூடும். பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும் .
4)கடகம்:-
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலிலும் நல்ல வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு.
5)சிம்மம்:-
தொழிலில் கூட்டாளிகள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்ள மாட்டார்கள். உத்தியோகத்தில் திடீர் இடம் மாற்றம் மனதை வாட வைக்கும்.
6)கன்னி:-
பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.
7)துலாம்:-
பெண் வழி பிரச்சினைகள் அகலும். வெளிநாடு செல்ல எடுத்த முயற்சி கைகூடும். தொழில் முயற்சியில் கூடுதல் லாபம் கிட்டும்.
8)விருச்சிகம்:-
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்கள் நல்ல தகவலை தருவர் .
9)தனுசு:-
படித்து முடித்து இது நாள் வரை வேலை இன்றி இருந்த பிள்ளைகளுக்கு இந்த காலகட்டத்தில் வேலை வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
10)மகரம்:-
அற்புதமான நேரமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுய தொழில் தொடங்கலாம் என்று சிந்திப்பீர்கள் .
11)கும்பம்:-
ஆடை,ஆபரண சேர்க்கை உண்டு. வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகழ்வீர்கள்.
12)மீனம்:-
உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர். இழப்புகளை ஈடு செய்ய புதிய வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும்.