இன்றைய நாள் எப்படி – 25 ஏப்ரல் 2024
25/04/2024 வியாழக்கிழமை
1)மேஷம்:-
ஒரு சிலருக்கு இடமாற்றம் ,வீடு மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இலாகா மாற்றம் அல்லது புதிய வேலைகளுக்கான முயற்சிகள் கைகூடும்.
2)ரிஷபம் :-
உங்களின் பணத்தொகை உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட சரிவை ஈடு கட்டுவீர்கள்.
3)மிதுனம்:-
தொழில் முன்னேற்றம் உண்டு. தொழிலில் இருந்த குறுக்கீடுகள் தானாகவே விலகும். கொடுக்கல் வாங்கல்களில் சுமூகமான நிலை உருவாகும்.
4)கடகம்:-
தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். தந்தை வழி உறவால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தை பொருத்தவரை நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.
5)சிம்மம்:-
நிறைந்த தன லாபம் உண்டு. என்றாலும் மனதில் ஒரு வித பய உணர்வு ஏற்படும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படாது.
6)கன்னி:-
திருமண வயதை அடைந்த ஆண் பெண்களுக்கு திருமண பேச்சு வார்த்தை நடைபெறும். ஆனால் அவ்வளவு சுலபத்தில் திருமணம் முடிவாகாது .
7)துலாம்:-
தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். கடன் சுமை குறையும் .
8)விருச்சிகம்:-
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் வெற்றி நடை போடும். இந்த நேரத்தில் இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
9)தனுசு:-
ஆரோக்கிய தொல்லைகள் அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். பழைய தொழிலை விட்டு புதிய தொழிலில் கவனம் செலுத்துவீர்கள்.
10)மகரம்:-
தன வரவு தாராளமாக வந்து சேரும். தடைகள் அகலும். வீரத்தோடும் விவேகத்தோடும் செயல்படுவீர்கள்.
11)கும்பம்:-
தன வரவு திருப்தி தரும். பொருளாதார பெற்ற குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
12)மீனம்:-
ஏற்றமும் இரக்கமும் கலந்த நிலை ஏற்பட்டாலும் எப்படியாவது காரியங்கள் கடைசி நேரத்தில் கை கூடிவிடும்.