போதகரின் ஆராதனை நீரில் உயிரிழந்த பெண்
மதுரங்குளிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற ஆராதனையின் போது ஏற்பட்ட திடீர் நோய் நிலை காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் சிலாபம் பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் .
விசாரணையில் அந்த பெண்ணுக்கு நீண்ட நாட்களாக இதயநோய் மற்றும் சளி பாதிப்பு இருந்தமை தெரியவந்துள்ளதுடன் இதனை குணப்படுத்துவதற்காக அந்த பெண்ணினால் கொண்டுவரப்பட்ட நீரை போதகர் பிரார்த்தனை செய்து அதனை குடிக்க கொடுத்த பிறகு ஏற்பட்ட திடீர் நோய் நிலை காரணமாக பெண் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.