கேலிக்கூத்தாக்கும் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய வேண்டும் – உதய கம்மன்பில
நாட்டு மக்களைக் கேலிக்கூத்தாக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும் என, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஏப்ரல் – 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை நான் அறிவேன் என்று தெரிவித்ததுடன், மைத்ரிபால சிறிசேன வழங்கிய சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பொய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்பையும், நாட்டு மக்களையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் கருத்துக்களைக் குறிப்பிட்டுக் கொண்டு இல்லாத பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் மைத்ரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.