புங்குடுதீவு விளையாட்டு கழகத்தின் மகளிர் அணியினருக்கு சீருடைகள்
புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டு கழகத்தின் மகளிர் அணியினருக்கு சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) போசகர் சமூகசேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி நிதியுதவியில் 15 வீராங்கனைகளுக்கான சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன.
புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டு கழகத்தின் மகளிர் அணியினரின் வேண்டுகோளுக்கிணங்க இன்று குறித்த சீருடைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின்போது கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியுடன் சூழகம் அமைப்பின் இணைப்பாளர் கருணாகரன் குணாளன் கலந்துகொண்டிருந்தார்.