கண் இல்லா அரசாங்கமும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும்
(கஜனா சந்திரபோஸ் )
பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையை அம்பாறை மாவட்ட செயலகமும் உள்நாட்டு அலுவலக அமைச்சும் அனுமதித்து வருகின்ற நிலையில் 34 ஆவது நாளாக கல்முனை வடக்கு பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களினால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வெளிக்கள உத்தியோகத்தர்கள் தங்கள் சுய விடுமுறையில் இன்றயதினம் காலை 8.30 மணி அளவில் குறித்த பிரதேச செயலகத்தில் இருந்து ஊர்வலமாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து கல்முனை பிரதான வீதி வழியாக சென்று போலீஸ் நிலைய பாதை வழியாக மீண்டும் பிரதேச செயலகத்தை வந்தடைந்தனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிதி நடவடிக்கைகள் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தினால் கையாளப்படுகின்ற நிலையில் கணக்காளர் பதவிக்கான ஆளணி அனுமதிக்கப்பட்டிருந்தும் அப்பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை இதுவரை மாவட்ட செயலகமும் உள்நாட்டளவர்கள் அமைச்சும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் சுமார் 300க்கும் அதிகமான உத்தியோகத்திற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் நியமிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் பிரதான பதவியான பிரதேச செயலாளர் இதுவரை நியமிக்கப்படவில்லை. அம்பாறை மாவட்ட செயலகமும் உள்நாட்டல்கள் அமைச்சும் இந்த பாரிய நிர்வாக தவறுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் 33 நாட்களாக பொதுமக்கள் போராடியும் எந்தவிதமான தீர்வும் இதுவரை கிடைக்கப்படாத நிலையில் இன்று குறித்த பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது .
இதன் போது ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்த பிரதேச செயலக வெளிகள உத்தியோகத்தர்கள் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டனர்.
facebook video link https://fb.watch/rIIfSTbSko/
youtube video link https://youtu.be/hvoi1tLW7TI?si=v5mL8XfIskYvjjrR