கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விஷேட அறிவிப்பு
அனைத்து அரசு பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் அனைத்து தனியார் பாடசாலைகளிலும் மாணவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு சேர்க்கும் போது தகமை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மாத்திரம் கருத்தில் கொண்டு இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு அதிபர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.