மே தினத்தையொட்டி பொலிசாரின்அறிவிப்பு
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை கொழும்பு நகரை சுற்றி கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறவுள்ளமையினால் விசேட போக்குவரத்து திட்டமொன்றை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளை 40 கூட்டங்கள் மற்றும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதன்போது, 19 மே தினக் கொண்டாட்டங்களும் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்று வரும் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் காரணமாக இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர்.