ஒரு கோடி இலஞ்சம் பெற்ற நால்வர் கைது
கொள்ளுபிட்டி பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஒரு கோடி ரூபாய் இலஞ்சமாக பெற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.