பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
நபர் ஒருவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றையும் அது தொடர்பான சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி குளியாபிட்டிய ஷொருகம பிரதேசத்தில் வைத்து அப்பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, NW PK- 0125 என்ற சில்வர் நிற மினி வேன் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, அந்த வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறது.
இதற்காக 2 தொலைபேசி இலக்கங்களையும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (குளியாபிட்டிய) – 0718 591 260
பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக நிலைய பொறுப்பதிகாரி – 0773 528 325