மே தினத்தில் உயர்த்தப்பட்ட சம்பளம் மறுநாள் முறியடிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சம்பளத்தை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
நிர்ணய சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார்.
சம்பளஇதற்கமைய நாளாந்த சம்பளம் 1,350 ரூபாவாகவும், நாளாந்த விசேட கொடுப்பனவு 350 ரூபாவாகவும் சேர்த்து மொத்தமாக 1,700 ரூபாவாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
“ஏற்கனவே இலங்கையின் தேயிலை விலை உயர்வால் உலக சந்தையை மிக வேகமாக இழந்து வருகிறது. இதனால் தேயிலை உற்பத்தியாளர்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். இது நாம் உருவாக்கிய பிரச்சனையல்ல. ஆலோசனை பெற்று என்ன செய்யலாம் என்று பார்ப்போம். செலுத்த முடியாத ஒன்றை விரும்பினால், சட்டரீதியான பிரச்சினை ஏற்படும். முன்மொழிவு முற்றிலும் நேர்மாறானது. வர்த்தமானி வந்திருப்பது தெரியும். எதிர்காலத்தில் என்ன செய்யாலம் என்று பார்ப்போம்” என ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
முந்தய செய்தி – https://www.tamilcnn.lk/archives/1049238.html