எரிவாயு விலை தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய குறைக்கப்பட்ட விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.