கொத்து உள்ளிட்ட சில உணவுகளின் விலை குறைப்பு
எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் உணவு பொருட்கள் சில்வற்றின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகிய உணவுகளின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.