இன்றைய நாள் எப்படி – 04 மே 2024

04/05/2024 சனிக்கிழமை 

1)மேஷம்:-
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாடு செய்க.குடும்பத்தில் ஏற்படும் கடன் பிரச்சினைகளை பெண்களை சமாளித்து விடுவீர்கள்.

2)ரிஷபம் :-
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாடு செய்க.கலைஞர்கள் சக பணியாளர்களின் மூலம் புதிய வாய்ப்புகளை பெறுவர். குடும்பச் செலவு அதிகரித்து தொல்லை தரலாம். பெண்களுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.

3)மிதுனம்:-
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாடு செய்க.குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை சமாளித்து விடுவீர்கள். சுயதொழில் சுறுசுறுப்பாக நடைபெறும்.

4)கடகம்:-
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாடு செய்க. குடும்பத்தில் உள்ள கடன் தொல்லைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள் .

5)சிம்மம்:-
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாடு செய்க.சக கலைஞர்களின் ஒத்துழைப்புடன் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் சீரான போக்கு இருக்கும். பெண்கள் தாய் வழி உறவுகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

6)கன்னி:-
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாடு செய்க. சக கலைஞர்களின் பிள்ளைகளுடைய கல்விச் செலவுக்கு பண உதவி செய்வீர்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

7)துலாம்:-
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாடு செய்க. பெண்களுக்கு அலுவலகத்தில் சம்பள உயர்வு கிடைக்கலாம். அதிக முயற்சியுடன் ஈடுபட்டால் செய்யும் காரியங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.

8)விருச்சிகம்:-
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாடு செய்க. குடும்பத்தில் சொத்து பிரச்சினையால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும் எதிர்பார்த்த பண வரவு தாமதமாகும். சிக்கனமாக செயல்படுவது நல்லது.

9)தனுசு:-
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாடு செய்க. திடீர் செலவுகளும் எட்டிப் பார்க்கும். நண்பர்கள் உதவுவார்கள். குடும்பத்தினரிடம் சுமூகமாக நடந்து கொண்டால் பிரச்சனைகளை சமாளிக்கலாம்.

10)மகரம்:-
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாடு செய்க. கடன் தொல்லைகளை சமாளிக்க புதிய கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். பெண்கள் குடும்ப பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.

11)கும்பம்:-
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாடு செய்க. பெண்களுக்கு ஆரோக்கிய சீர்கேட்டால் உற்சாகம் குறையலாம். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது பிரச்சினையை தவிர்க்கும்.

12)மீனம்:-
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாடு செய்க. பண வரவு மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் ஏற்படும் தொல்லைகளை பெண்களே சாமளித்துக் கொள்வார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.