சட்டவிரோத மாடறுப்பு நிலையம் சுற்றிவளைப்பு
யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சியினை வெட்டும் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் நான்கு மாடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும், உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் கைப்பற்றபட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேகநபர் ஒருவரை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி பல இடங்களில் இருந்தும் குறித்த மாடுகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை அந்த இடத்தில் இருந்து விலங்குகளை இறைச்சியாக்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.