இன்றைய நாள் எப்படி – 06 மே 2024
06/05/2024 திங்கட்கிழமை
1)மேஷம்:-
துடிப்போடு செயல்பட்டு அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். புனித பயணங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை செயல்படுத்துவீர்கள்.
2)ரிஷபம் :-
தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பெண்களுக்கு ராகு கேது பெயர்ச்சியின் விளைவாக நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். செல்வநிலை உயரும்.
3)மிதுனம்:-
வீடு,மனை சேர்க்கை உண்டு. கட்டிய வீட்டை பழுது பார்க்கும் சூழல் சிலருக்கு ஏற்படும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நேரம் இது.
4)கடகம்:-
இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். கடன் சுமை குறையும் பழைய பங்குதாரர்கள் விலகினாலும் புதிய பங்குதாரர்கள் வந்து இணைவர். பொருளாதார உயரும்.
5)சிம்மம்:-
சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
6)கன்னி:-
பிள்ளைகளின் கல்வி கல்யாணம் போன்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு .
7)துலாம்:-
ஆன்மீகப் பயணம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.
8)விருச்சிகம்:-
திருமண முயற்சி பலன் தரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தொழில் வெற்றி நடை போடும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுத்து கொடுப்பர்.
9)தனுசு:-
நீங்கள் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட அவர்கள் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள்.
10)மகரம்:-
குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவுகள் வரும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.
11)கும்பம்:-
வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். உங்கள் பலத்தை புரிந்துக் கொள்வீர்கள். கணவருக்கும் உங்களுக்குமிடையே இடைவெளி ஏற்படுத்த சிலர் முயல்வார்கள்.
12)மீனம்:-
புது வாகனமும் வாங்குவீர்கள். இடம் மாறுவீர்கள். உங்களிடம் எழுத்துத் திறமை அதிகரிக்கும். ரசனைக்கேற்ப வீடு அமையும். கணவருக்கு வேலைக் கிடைக்கும்.