நிராகரிக்கப்பட்டது நீதியமைச்சரின் மனு
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணையின்றி நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தமக்கு பிறப்பித்த தடை உத்தரவின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு கோரி விஜயதாச ராஜபக்ஷ குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.