பாஸ்மதி அரிசிக்கு மாற்றீடான அரிசி வகை கண்டுபிடிப்பு
பாஸ்மதி அரிசிக்கு மாற்றீடாக 2 மாற்று நெல் வகைகளை பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் கண்டறிந்துள்ளது.
ஏ.ரி 306 மற்றும் ஏ.ரி 309 ஆகிய இந்த நெல் வகைகள் பாஸ்மதி அரிசியைப் போன்று நீளமானவை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது சுற்றுலா மற்றும் விருந்தகங்களின் பயன்பாட்டிற்காக மாத்திரம் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது.எவ்வாறாயினும் இலங்கையில் இனங்காணப்பட்ட இந்த 2 மாற்று நெல் இனங்களுக்கு பயிர் விநியோகக் குழுவின் பரிந்துரை வழங்கப்படவுள்ளது.
குறித்த பரிந்துரையை அடுத்து எதிர்வரும் மாதங்களில் அவற்றை இலங்கையில் பயிரிடுவதற்காக விநியோகிக்க உள்ளதாக பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.