மாகாண மட்டங்களில் வைத்தியசாலை தொழிற்சங்க நடவடிக்கை
தமது கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்று முதல் மாகாண மட்டத்தில் வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் 4 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தாதியர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடமாட்டார்கள் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி.மெதிவத்த தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கை அமுலப்படுத்தப்பட்டுள்ள மருத்துவமனைகளின் விபரங்கள் பின்வருமாறு
09 – வட மத்திய மாகாணம்
13 – மத்திய மாகாணம்
14 – சப்ரகமுவ மாகாணம்
15 – வடமேல் மாகாணம்
16 – தென் மாகாணம்
20 – ஊவா மாகாணம்
21-மேல் மாகாணம் போன்றவற்றில் தொழிற்சங்க நடவடிக்கை அமுல்படுத்தப்படும்.