குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்காவில் கைதான நடன கலைஞர்
சுமார் 5 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நடன கலைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து இலங்கை வந்துள்ளார்.
கைதான சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.