T20 உலகக் கிண்ண தொடருக்கு தயாரான இலங்கை அணி
எதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.
வனிது ஹசரங்க தலைமையிலான குறித்த அணியில் 15 வீரர்கள் உள்ளனர்.
இதற்கமைய உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி மே மாதம் 14 ஆம் திகதி இலங்கையில் இருந்து வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 1 முதல் 29 வரை நடைபெற உள்ளது.