பெண்ணுடன் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட கடற்படை கோப்ரல்
பெண் ஒருவருடன் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கடற்படை கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அனுராதபுரம் நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அநுராதபுரம் பிரதேச குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரான கடற்படை கோப்ரலை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பொலிஸார், ஹெரோயின் கடத்தல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய கடற்படை கோப்ரல் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர் எனவும் குறித்த பெண் சில காலமாக வழங்கிய மோட்டார் சைக்கிளில் இருந்து ஹெரோயின் விநியோகம் செய்து வந்தவர் எனவும் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.