பதவி துறந்த மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தலைவர் பதவி மற்றும் அந்த கட்சியின் நிறைவேற்று குழுவிலிருந்து விலகியுள்ளார்.
எதுல் கோட்டேவில் இடம்பெற்ற குறித்த கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தின் போது இவ் விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு கட்சியின் நிறைவேற்றுக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.