தாமரைக் கோபுரத்தில் சாகசம் புரிந்தவர் வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு தாமரைக் கோபுரத்தில் பராசூட் சாகசத்தின் போது வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று மதியம் அவர் தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாய்ந்த போது அவரது பராசூட்டை திறப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த வெளிநாட்டவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்துப் பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.