பிரித்தானிய நகரின் முதல்வராக இலங்கைத் தமிழர்
பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து அகதியாக சென்ற தமிழர் ஒருவர் பதவியேற்றுள்ளார்.
தொழிற் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே இவ்வாறு பிரித்தானியவின் இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை (15) இடம்பெற்ற குறித்த பதவியேற்பு நிகழ்வின் போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டமை இப்ஸ்விச் நகரத்தின் பன்முகத் தன்மையையும், பன்முக கலாசாரத்தையும் எடுத்துக் காட்டுவதாக இந்து சமாசத்தின் தலைவர் சச்சின் கராலே தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.