இன்றைய நாள் எப்படி – 19 மே 2024

 19/05/2024 ஞாயிற்றுக்கிழமை 

1)மேஷம்:-
பணி புரியும் இடத்தில் வீடு வாகனம் வாங்க விண்ணப்பிக்க கூடியவர்களுக்கு அந்த முயற்சி கைகூடும். ஆடை அபரணச் சேர்க்கை உண்டு. நீண்ட நாட்களாக முயற்சித்தும் நடைபெறாத காரியங்கள் இப்பொழுது நடைபெறும்.

2)ரிஷபம் :-
ஒரு காரியத்தை செய்யலாமா வேண்டாமா என்று இரட்டை சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். சகபணியாளர்களாலும் தொல்லை உண்டாகலாம்.

3)மிதுனம்:-
வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்பு மகிழ்ச்சி தரும். சுப விரயங்கள் அதிகரிக்க உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவி சாய்ப்பார்.

4)கடகம்:-
குடும்பத்தின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் உங்களை விட்டு விலகுவர். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பழைய ஆபரணங்களை கொடுத்துவிட்டு புதிய ஆபரணங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.

5)சிம்மம்:-
வாடகை கட்டிடத்தில் இருக்கும் தொழிலை சொந்த கட்டிடதிற்கு மாற்றலாமா? என்று யோசிப்பீர்கள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் ஆடம்பர பொருட்களையும் வாங்கி சேர்க்க முன்வருவீர்கள்.

6)கன்னி:-
வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம். ஆடை அபரணச் சேர்க்கை உண்டு.

7)துலாம்:-
பத்திரப்பதிவில் இருந்த தடை அகலும். உத்தியோகத்தில் இதுவரை கேட்டு கிடைக்காத சலுகைகள் இப்பொழுது கிடைக்கும்.

8)விருச்சிகம்:-
செல்வாக்கு அதிகரிக்கும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள்.

9)தனுசு:-
கடன் சுமை குறைய வழி பிறக்கும். உடல் ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

10)மகரம்:-
ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. பெண்வழி பிரச்சனைகள் அகலும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும்.

11)கும்பம்:-
தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகழும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

12)மீனம்:-
விரையங்களில் இருந்து விடுபட சுப பிரியங்களை மேற்கொள்வது நல்லது. உறவினர்களிடம் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.