ஸ்கொட்லாந்தில் இனப்படுகொலைக்கு நீதி கோரிய போராட்டம்
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி மற்றும் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி ஸ்கொட்லாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த நீதிப் போராட்ட நிகழ்வினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் ஐக்கியராட்சிய தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததோடு பிரித்தானிய வாழ் இலங்கைத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.