சில அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் இன்று (22) முதல் அமுலாகும் வகையில் சில அத்தியவசிய நுகர்வுப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது.
இதற்கமைய ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 950 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் இந்தியப் பெரிய வெங்காயத்தின் விலை 250 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லங்கா சதொச ஊடாக ஒரு கிலோகிராம் கொண்டைக் கடலை 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.