எழுச்சிமிக்க அரசியல் இயக்கம் சர்வஜன அதிகாரமே

!

பாரம்பரிய அரசியல் கட்சிகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நாட்டில் எஞ்சியுள்ள ஒரேயொரு எழுச்சிமிக்க அரசியல் இயக்கம் சர்வஜன அதிகாரம் என அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

சர்வஜன அதிகாரத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இந்த ஆண்டு தேர்தல் முடிவுகளின்படி சர்வஜன அதிகாரம் அதிக சதவீதத்தில் முன்னேறியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகக் குறைந்த சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது.

அவர்கள் பொதுஜன பெரமுனவின் அனைத்து ஆற்றலையும் பயன்படுத்தியும் இந்நிலையிலேயே உள்ளனர்.

பெசில் ராஜபக்ச அரசியலில் இருக்க வேண்டும் என்பதற்காகவே மொட்டு கட்சி உருவாக்கப்பட்டது.

அந்த கட்சிக்கு எதிர்கால நோக்கம் இல்லை. அமெரிக்க குடிமகன் நாட்டை விட்டு வெளியேறினார், இப்போது ஆள் திரும்பவே இல்லை.

பாரம்பரிய ஐக்கிய தேசியக் கட்சி இப்போது இல்லை. அது கேஸ் சிலிண்டர் ஆகிவிட்டது.

பலர் கடுமையாக உழைத்து ரவி கருணாநாயக்கவை பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்.

மொட்டு கட்சி சிதறி சென்று கேஸ் சிலிண்டரில் உள்ளனர், சிலர் அதிலும் இல்லை’என்றார்