பிரத்தியேக வகுப்புகளுக்குச்செல்லும் பெண் பிள்ளைகளுக்கு ஹோர்ன் அடித்து தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை
.
அதிக ஒளி, ஒலியெழுப்பும் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தும் நபர்களுக்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை – பொலிஸார் விடுக்கும் அறிவித்தல்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிக ஒளி மற்றும் ஒலியெழுப்பும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தும் நபர்களுக்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிக்கும் போது அல்லது முடிவடையும் போது பெண் பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்யும் குறித்த நபர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கவுமாறும் குறித்த விடயம் தொடர்பில் தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படுமென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்மாந்துறை பொலிஸ் நிலையம் 0672 260 222 எண்ணைத்தொடர்பு கொண்டு குறித்த நபர்கள் பற்றிய தகவலை அறிவிக்குமாறும் கேட்டுள்ளனர்